on Monday, October 28, 2024
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்துக்கு சொந்தமான 23 குரல் பதிவு கருவிகள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பரீட்சை திணைக்களம் தொடர்பாக கணக்காய்வு அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையின் பிரகாரம், பாடசாலை பரீட்சை அமைப்புக் கிளைக்கு வழங்கப்பட்ட 07 குரல் பதிவு கருவிகளை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மதிப்பீட்டு நோக்கங்களுக்காக ஒப்படைக்கப்பட்ட 16 குரல் குரல் பதிவு கருவிகளும் மாயமாகியுள்ளன.
இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு, இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக, பரீட்சை திணைக்கள கணக்கு அலுவலர், தேசிய கணக்காய்வு அலுவலகத்துக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசின் நிதி விதிகளின்படி இது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பரீட்சை திணைக்களத்துக்கு தேசிய கணக்காய்வு அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.