மலையக மக்களின் நலன் கருதியும், மலையகத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவுமே ரஞ்சன் ராமநாயகவின் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியோடு தாம் இணைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் முதலாவது பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே வடிவேல் சுரேஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மலையக மக்கள் புதிய மாற்றத்தை எதிர் பார்க்கின்றனர். அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே நாங்கள் ஐக்கிய ஜனநாயகக் குரலுடன் இணைந்து கொண்டுள்ளோம்.
எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சி சார்பில் மலையகத்தில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்” இவ்வாறு வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
https://www.facebook.com/share/v/Xhpey7tGm8b1wEWN/