பிரிட்டனுக்குள் சட்ட விரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோரின் மையமாக இந்த ஜெர்மன் நகரம் விளங்குவது எப்படி?

காணொளிக் குறிப்பு, ஆங்கில கால்வாயை கடக்க சட்டவிரோத பயணம்: ஜெர்மன் நகரம் மையமாக திகழ்வது எப்படி?

பிரிட்டனுக்குள் சட்ட விரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோரின் மையமாக இந்த ஜெர்மன் நகரம் விளங்குவது எப்படி?

பிபிசி புலனாய்வு செய்தியாளர் ஒருவர் புலம்பெயர்ந்தவர் போன்று நடித்து, ஜெர்மனியில் புலம்பெயர்ந்தோரின் மையமாக விளங்கும் எசென் நகரில் ரகசியமாக படம்பிடித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோர் சிறிய படகுகளில் பிரிட்டனை அடைவதற்கு உதவிவரும் அபு சாஹரை அவர் சந்தித்தார்.

புலம்பெயர்ந்தோர் பயன்படுத்தும் மிகச்சிறிய படகுகள், மோட்டார்கள் குறித்த வீடியோவை அவர் காண்பித்தார்.

அருகே வைக்கப்பட்டிருந்த அப்படகு விற்பனைக்கு தயாராக இருப்பதாக சாஹர் கூறியுள்ளார்.

‘ஹம்சா’ (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற செய்தியாளரும் சாஹரும் எசென் நகரில் கஃபே ஒன்றில் அமர்ந்திருந்தனர்.

அவர்களுடன் அல்-கல் என்பவர் இணைந்தார். அதிகாரியை குறிக்கும் ‘அங்கிள்’ என்ற வார்த்தையாலும் அவர் அறியப்படுகிறார்.

ஜெர்மனின் கடும் சட்டத்தால், ஆடியோவை பதிவு செய்ய முடியவில்லை. எனவே, ‘ஹம்சா’ அந்த சந்திப்பு பற்றி வேறொரு செய்தியாளரிடம் விவரித்தார்.

துருக்கியிலிருந்து உபகரணங்கள் வருவதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

எசென் நகரை சுற்றி 10 சேமிப்பு கிடங்குகள் அவர்களிடம் உள்ளன.

சில தினங்களுக்கு முன்பு கூட போலீசார் சோதனையிட்டனர். ஆனால், பொருட்களை தனியே பிரித்து, அதிலிருந்து அவர்கள் தப்பித்தனர்.

துருக்கியிலிருந்து மேற்கு ஜெர்மனி வரை அவர்கள் படகுகளை இயக்குகின்றனர்.

இத்தகைய படகுகளை சேமித்து வைப்பதற்கான முக்கிய மையமாக பிரிட்டன் விளங்குவதாக பிரிட்டனின் தேசிய குற்றவியல் முகமை உறுதிசெய்துள்ளது.

கேலே நகருக்கு அருகே தீவிர கண்காணிப்புக்கு உட்பட்ட கடற்கரைகளுக்கு எசென் நகரம் மிக நெருக்கமாக இல்லாததால், இப்படகுகள் இங்லீஷ் கால்வாயை கடக்க பயன்படுத்தப்படுகின்றன.

ஜெர்மானிய சட்டப்படி, ஐரோப்பிய யூனியனிலிருந்து மக்களை பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு அனுப்ப உதவுவது சட்ட விரோதமானது.

கஃபேவில் அவர்கள் பணம் பற்றி பேசத் தொடங்கினர்.

‘உங்களுக்கு ஒரு படகு பிடித்து தருகிறேன். எனக்கு, 15,000 யூரோ (சுமார் ரூ. 13 லட்சம்) தாருங்கள்’ என அவர் என்னிடம் கூறினார்.

‘60 உயிர் காக்கும் கவசங்கள் மற்றும் எல்லா உபகரணங்களும் கேலே பகுதிக்கு உறுதியாக வந்துவிடும்’ என்றார்.

இதற்கான சாட்சியங்களாக, அவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட வீடியோக்கள், மெசேஜ்கள், வாய்ஸ் நோட் ஆகியவை உள்ளன.

சில உரையாடல்களில், எஞ்சின் மாதிரிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடக்கும் பகுதிகள் குறித்து சாஹர் பகிர்ந்துகொண்டார்.

இத்தகைய கும்பல்களை தடுப்பதில் ஒத்துழைப்பை அதிகரித்துள்ளதாக, ஜெர்மன் மற்றும் பிரிட்டன் அரசாங்கங்கள் கூறுகின்றன.

பிரான்ஸ் கடற்கரை நெடுக கைவிடப்பட்ட உயிர்காக்கும் கவசங்கள் மற்றும் சிறு படகுகள் ஆகியவை, சிறப்பான வாழ்க்கைக்கான தேடல் மற்றும் விரக்தியை உணர்த்துவதாக உள்ளன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு