டக்ளஸ் போன்ற கூசாக்களிற்கு இடமில்லை: தேசிய மக்கள் சக்தி?

by smngrx01

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அமைச்சுகளில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு சில அரசியல் கட்சிகள் தேசிய மக்கள் சக்தியின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் பிரசாரங்களை செய்து கொண்டு வருகின்றன.

கடந்த அரசாங்கங்களின்போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் எந்தத் தரத்தில் இருந்தாலும் அவர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு எதிராக உரிய விசாரணைகளை மேற்கொள்வதற்கு உரிய அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அண்மையில் டக்ளஸ் தேவானந்தாவும் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தார். அந்தப் புகைப்படங்களை வைத்து தங்களுக்குச் சாதகமான அரசியல் நாடகங்களை டக்ளஸ் தேவானந்தா செய்து வருகின்றார்.

அவர் மாத்திரமல்ல சுமந்திரன், சிறீதரன் போன்றோரும் அதனையே செய்கின்றனர். ‘எந்தக் கட்சி வந்தாலும் நானே கடற்றொழில் அமைச்சர், ஆகவே அநுரகுமாரவின் ஆட்சியிலும் நான்தான் அமைச்சராக வரப்போகின்றேன், அதனால் எனக்கு வாக்களியுங்கள்’ என்ற சித்து விளையாட்டை டக்ளஸ் தேவானந்தா செய்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.ஆனால் டக்ளஸ் தேவானந்தாவை அமைச்சுகளில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என பிமல் ரத்நாயக்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்