ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) தலைமையிலான கூட்டணி, அந் நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது.
இது ஒரு தசாப்தத்திற்கும் மேலான கட்சியின் மோசமான முடிவு இதுவாகும்.
லிபரல் டெமாக்ரடிக் கட்சி கட்சியும் மற்றும் அதன் கூட்டணிக் பங்காளிக் கட்சியும் ஆட்சியும் நாடாளுமன்றத்தில் 215 இடங்களை மாத்திரம் பெற்றன.
இதனால், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான 233 ஆசனங்களை லிபரல் டெமாக்ரடிக் கட்சி பெறத் தவறிவிட்டது.
லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் புதிய தலைவர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) பிரதமராக பதவியேற்ற சில நாட்களிலேயே தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில், அவரது கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தமையால், இப்போது இஷிபாவின் அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டுக்கு பின்னர், லிபரல் டெமாக்ரடிக் கட்சி நாடாளுமன்ற பெரும்பான்மையை இழப்பது இதுவே முதல் முறையாகும்.
1955 இல் நிறுவப்பட்டதிலிருந்து, குறித்த கட்சி கிட்டத்தட்ட தொடர்ந்து நாட்டை ஆட்சி செய்து வருகிறது.