இந்த அரசாங்கம் மூன்று மாதங்களிற்கு மேல் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை.என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
நீர்கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
எனக்கும் பெரும்பான்மை இருக்கவில்லை அனுரகுமார திசநாயக்கவிற்கும் பெரும்பான்மையில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்படியென்றால் எங்கள் இருவருக்கும் இடையில் என்ன வித்தியாசம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை தேர்தலில் தோல்வியடைந்தால் என்னை வீட்டிலிருக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனக்கு பெரும்பான்மையானவர்கள் வாக்களிக்கவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்றும்
நாடு வீழ்ச்சியடைந்த போதுபொறுப்பேற்க எவரும் இருக்கவில்லை. சஜித்தும் இல்லை அனுரவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றம் சுற்றிவளைக்கப்பட்ட வேளை எவரும் இருக்கவில்லை,தற்போது தலைமைத்துவத்தை கோரும் அனைவரும் தப்பியோடினார்கள் என்றும் நாங்கள் இராணுவத்தை பயன்படுத்தி இந்த நாட்டை காப்பாற்றினோம்.
மேலும் ஆகவே நாட்டிற்கு தலைமை தாங்ககூடியவர்களிற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.ஆகவே நாட்டிற்கு தலைமை தாங்ககூடியவர்களிற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் அனுபவசாலிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால் ஜனாதிபதியால் மூன்று வருடங்கள் ஆட்சி செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்
அவ்வாறான சூழ்நிலை காணப்படாவிட்டால் நாட்டில் வரிசைகள் யுகம் உருவாகும்.தற்போதைய தேங்காய் வரிசைகளிற்கு பதில் புதிய வரிசைகள் உருவாகும் என்றும் குறிப்பிட்டார்