வளர்ந்துவரும் ஆசிய அணிகளுக்கு இடையிலான ரி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
இறுதி போட்டியில் இலங்கை ‘ஏ’ மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகளுக்கு இடையில் நேற்று இறுதி போட்டி இடம்பெற்றது.
ஓமனில் உள்ள அல் அமெரத் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை ‘ஏ’ அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பில் சஹான் ஆராச்சிகே அதிக பட்சமாக ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் பிலால் சமி 22 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் – ஏ அணி 18 தசம் 1 ஓவரில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றிபெற்றது.
அதன்படி, ஆப்கானிஸ்தான் – ஏ அணி முதற்தடவையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது.
23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ணப் போட்டி 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் இம்முறை 6ஆவது தடவையாகவும் நடைபெற்றது. இலங்கை இதற்கு முன்னர் இரண்டு முறை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது.
அதில் இரண்டிலும் இலங்கை அணி கிண்ணம் வென்றது சிறப்பம்சமாகும்.
எனினும் ஆப்கானிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றமை இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.