ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை பெறதவறியுள்ளது.
பெரும்பான்மையை பெறுவதற்கு 235 ஆசனங்களை கைப்பற்றவேண்டிய நிலையில் லிபரல் ஜனநாயக கட்சியும் அதன் கூட்டணிகளும் 215 ஆசனங்களை மாத்திரம் கைப்பற்றியுள்ளன.
2009ம் ஆண்டின் பின்னர் ஜப்பானில் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை பெற தவறியமை இதுவே முதல் தடவை.
லிபரல் ஜனநாயக கட்சி 1955 முதல் ஜப்பானை பலதடவைகள் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்து வந்துள்ளது.
கடந்த சில வருடங்களாக லிபரல் ஜனநாயக கட்சி ஊழல் குற்றச்சாட்டுகள் மக்கள் ஆதரவின்மை உட்பட பல குழப்பத்தில் சிக்குண்டுள்ள நிலையிலேயே இந்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சி தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ள போதிலும் தொடர்ந்து ஆட்சி செய்யப்போவதாக பிரதமர் சிகேரு இஸ்கிபா தெரிவித்துள்ளார்.
சிகேரு இஸ்கிபா இந்த மாதமே ஜப்பான் பிரதமராக பதவியேற்றார்