கமு/கமு/கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழாவின் சிறப்பு வாணிவிழா

by wp_shnn

(சித்தா)

கமு/கமு/கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் 125 ஆண்டு விழாவினைக் கொண்டாடி வரும் நிலையில் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழாவின் சிறப்பு வாணிவிழா 26.10.2024 ஆம் திகதி சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழாவின் சிறப்பு வாணிவிழா நிகழ்வானது அதிபர் சகோதரர் எஸ்.இ.ரெஜினோல்ட் தலைமையில் நடைபெற்றது. விழாவின் ஆன்மீக அதிதி ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தாஜி மகராஜ், பொது முகாமையாளர், இராமகிருஷ்ண மிஷன், மட்டக்களப்பு, பிரதம விருந்தினர் திருமதி. தர்ஷினி பிரசாந், மேலதிகச் செயலாளர், அபிவிருத்தி வலுசக்தி அமைச்சு, கொழும்பு, கௌரவ விருந்தினர் டாக்டர் இரா. முரளீஸ்வரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவை பணிமனை, மட்டக்களப்பு, திரு.சா.விக்னராஜா, கணக்காளர், பிரதேச செயலகம், களுவாஞ்சிகுடி, டாக்டர் ந.ரமேஸ், சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதார சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், கல்முனை வடக்கு, எம்.எச்.எம்.ஜாபிர், பிரதிக் கல்விப் பணிப்பாளர், கல்முனை வலயக் கல்வி அலுவலகம், மற்றும் விசேட விருந்தினர், சிறப்பு விருந்தினர்கள் கலந்து விழாவினைச் சிறப்பித்தனர்.

அதிதிகள் கமு/கமு/கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் பெண்கள் பாடசாலை வளாகத்திலிருந்து கலை, கலாசார பாரம்பரியங்களோடு கோலாட்டம், கும்மி, மயிலாட்டம், கரகாட்டம், பாற்குடப் பவனி, இந்து சமயத்தைப் பிரதிபலிக்கின்ற வடிவங்கள், நாதஸ்வர வாத்திய இசை முழங்க வரவேற்கப்பட்டனர். இரு புறமும் இந்துமா மன்ற மாணவர்கள் நந்திக் கொடியினை ஏந்தி நிற்க ‘அணையா விளக்காய் ஒளிர்வாய்’ எனும் கருப்பொருள் தாங்கிய 125 ஆவது ஆண்டு விழாவினது பதாதையினை மாணவர்கள் முன்கொண்டு செல்ல அவர்களுடன் இணைந்த வகையில் தேசியக் கொடி, பாடசாலைக் கொடி, என்பன காண்பவர்களுக்கு விருந்து படைத்துக் கொண்டிருக்கின்ற காட்சியானது மனதை ஒருநிலைப்படுத்தியதாககக் காணப்பட்டது.

நிகழ்வின் அடுத்தபடியாக கொடியேற்றல், மங்கல விளக்கேற்றல், ‘அணையா விளக்காய் ஒளிர்வாய்’ எனும் கருப்பொருள் தாங்கிய 125 ஆவது ஆண்டு விழாவின் சிறப்புப் பாடல், கலாசார நிகழ்வுகள், ஆன்மீக உரை, வெற்றியீட்டிய மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கல், விருந்தினர்கள் உரை, நன்றியுரை எனப் பல்வேறு மேடை நிகழ்வுகளும் கல்லூரி வளாகத்தைச் செழுமைப்படுத்தியிருந்தன. கமு/கமு/கல்முனை கார்மேல் பற்றிமா  கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழாவின் சிறப்பு வாணிவிழாவானது வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்திகள்