பெரமுன :எஞ்சியவர்களும் கலைப்பு!

by admin

இலங்கையில் தீண்டுவார் அற்ற கட்சியாக மாறிவரும் பெரமுனவில் தொடர்ந்தும் வெளியேற்றங்கள் நடந்தவண்ணமேயுள்ளது.பலரும் கட்சியை விட்டு தப்பித்து ஓடியுள்ள நிலையில் எஞ்சியவர்கள் மோசடி குற்றச்சாட்டில் வெளியேற்றப்பட்டுவருகின்றனர்.

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி பணம் மோசடியில் ஈடுபட்டதான சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பெரமுன உறுப்பினர் ம.பரமேஸ்வரன், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதான குற்றசாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ம.பரமேஸ்வரன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என மத்தியகுழு அறிவித்துள்ளது.

குறித்த நபர் மீதான முறையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் முடிவடைந்த பின்னர், அந்நபரை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வதா இல்லையா என்பது குறித்து கட்சியின் மத்தியகுழு பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்