கமு/கமு/கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் சிறப்பாக நடைபெற்ற வாசிப்பு மாத நிகழ்வுகள்

by wamdiness

கமு/கமு/கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் சிறப்பாக நடைபெற்ற வாசிப்பு மாத நிகழ்வுகள் on Saturday, October 26, 2024

(சித்தா)

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதமாகப் பிரகடனம் செய்யப்பட்டு பல்வேறு நிகழ்வுகள் பாடசாலை மட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த வகையில் தேசிய வாசிப்பு மாதம், பாடசாலை நூலக வாரம், பாடசாலை நூலக தினம் எனபவற்றை கமு/கமு/கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை இவ்வாண்டு நடைமுறைப்படுத்தி வருகின்றது.

நூல்கள் உட்பட ஆக்கபூர்வமான வாசிப்பு சாதனங்களைத் தெரிவு செய்து வாசிப்பதனூடாக சமநிலையான ஆளுமையுடன் கூடிய உணர்வு பூர்வமான அறிவைக் கொண்ட சிறுவர் சந்ததியை உருவாக்குவதற்காக ஒவ்வொருவரும் வாசிப்பினை தமது வாழ்நாள் பழக்கமாக்கிக் கொள்ளும் குறிக்கோளுடன் இந் நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் கமு/கமு/கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் வாசிப்பு மாத நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் சகோதரர் எஸ்.இ.ரெஜினால்ட் தலைமையில் புத்தகக் கண்காட்சி, மற்றும் விழிப்புணர்வு ஊர்வலங்கள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றன.

தொடர்புடைய செய்திகள்