இஸ்ரேல் மீது ஈரான் மற்றம் அதன் ஆதரவு அமைப்புகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி நடத்தப்படுவதாக இஸ்ரேல் அறிவித்தது.
ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.
இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, இஸ்ரேலியப் படைகள் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்துகின்றன என்பதை உறுதிப்படுத்தும் வீடியோ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஈரானிடம் இருந்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஈரானிய தலைநகரைச் சுற்றி குறைந்தது ஏழு வெடிப்புச் சத்தங்களை செவிமடுத்ததாகவும் இந்த வெடிப்புகள் இப்பகுதியை உலுக்கியது என குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஈரானின் தலைநகரில் கேட்கப்பட்ட சில வெடிப்புச் சத்தங்கள் தெஹ்ரானில் பாதுகாப்பு நடவடிக்கைகளால் ஏற்பட்டவை என்றும் இந்த சம்பவத்தின் போது வான் பாதுகாப்பு வெற்றிகரமாக இருந்தது என்று பாதுகாப்பு ஆதாரத்தை மேற்கோளிட்டுள்ளது ஈரானின் உத்தியோகபூர்வ IRNA செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தெஹ்ரானின் இமாம் கொமெய்னி சர்வதேச விமான நிலையம் வழமை போல் அமைதியாக இயங்கி வருவதாக கூறப்பட்டுள்ளது.
சமநேரத்தில் தெஹ்ரானின் இரவு நேர காணொளிகள் வெளியாகியுள்ளன. அவை மிகவும் அமைதியாக நகரம் இருப்பதை காண்பிக்கிறது.
இஸ்ரேல் தற்காப்புப் பயிற்சியாகவும், அக்டோபர் 1 அன்று இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாகவும் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகளுக்கு எதிராக இலக்குத் தாக்குதல்களை நடத்துகிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம் என அமெரிக்கா கூறியது.
சிரியாவின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள சில இராணுவ தளங்களையும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் குறிவைத்துள்ளதாக சிரிய அரச செய்தி நிறுவனம் கூறுகிறது.
காசா மற்றும் லெபனானில் இஸ்ரேலின் தாக்குதலுக்கும், மூத்த ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லாத் தலைவர்கள் கொல்லப்பட்டதற்கும் பதிலடியாக அது கிட்டத்தட்ட 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது, அக்டோபர் 1 அன்று இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
ஈரானின் ஏவுகணைகள் முக்கிய இராணுவ மற்றும் பாதுகாப்பு இலக்குகளை இலக்காகக் கொண்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) கூறியது.
ஈரான் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டது அதற்கு ஒரு பொிய விலை கொடுக்க வேண்டும் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார்.