நோர்வேயில் தொடருந்து தடம் புரண்டது!

by 9vbzz1

நோர்வேயின் வடக்குப் பகுதியில் சுமார் 55 பேருடன் ஓடிக்கொண்டிருந்த பயணிகள் தொடருந்து நேற்று வியாழக்கிழமை தடம் புரண்டதில் ஒருவர் உயிரிழந்தோடு மேலும் நால்வர் காயமடைந்தனர். 

ஆர்க்டிக் சர்க்கிள் எக்ஸ்பிரஸ் ட்ரொன்ட்ஹெய்மில் இருந்து வடக்கு நகரமான போடோவுக்கு செல்லும் வழியில் தடம் புரண்டது.

மீட்புப் பணிகளுக்காக 3 உலங்கு வானூர்திகள் சம்பவ இடத்திற்கு முதலில் சென்றன. தொடருந்து நோயாளர் காவுவண்டிகள் மற்றும் தீயணைப்பு வண்டிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

பாறைச் சரிவினால் பாறைகள் தொடருந்துப் பாதையான தண்டவாளப் பகுதியில் விழுந்தன. வேகமாக ஓடிவந்த தொடருந்து பாறையில் மோதியதில் தொடருந்து தடம் புரண்டது என நம்பப்படுகிறது.

தொடருந்த தடம் புரண்டபோது அதில் 55 பேர் இருந்தனர். அனைத்து பயணிகளும் தொடருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

தடம் புரண்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் இன்ஜினைக் காட்டியது அத்துடன் ஐந்து வண்டிகளில் முதல் வண்டி தண்டவாளத்திற்கு அடுத்ததாக சரிந்து காணப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்