பொது தேர்தல் பரபரப்பின் மத்தியில்இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் தொடர் சந்திப்புக்களை நடாத்திவருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க தூதரகத்தின் நிதியுதவியுடன் யாழ் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் மெய்யியல் துறையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக ஒத்திசைவு மற்றும் நல்லிணக்க செயற்றிட்டத்தின் கீழ் நடாத்தப்படும் “அகம்” உளவளத்துணை நிலையத்துக்கு குழுவினர் விஜயம் செய்துள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவை சந்தித்துள்ளார்;.
முன்னதாக தேர்தல் களத்திலுள்ள சி.சிறீதரன் உள்ளிட்டவர்களையும் அமெரிக்க தூதர் சந்தித்து பேசியுள்ளார்.
முன்னதாக மட்டக்களப்பின் பாசிக்குடா பகுதியில் தாக்குதலிற்கான முயற்சிகள் தொடர்பில் தனது பிரஜைகளிற்கு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கையினை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.