18
ஜனாதிபதி வேட்பாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் செலவு குறித்த அறிக்கை இன்று முதல் பொது மக்களுக்கு வெளிப்படுத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.குறித்த செலவு அறிக்கைகள் ராஜகிரிய தேர்தல் செயலகத்திலும் அதன் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலும் வெளிப்படுத்தப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அத்துடன், அந்த அறிக்கைகள் குறித்து எவருக்கேனும் சிக்கல்கள் காணப்படின் அது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.