நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விஜித ஹேரத் அறிவிப்பு !

by adminDev

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விஜித ஹேரத் அறிவிப்பு ! on Thursday, October 24, 2024

”அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பல சுற்றுலாபயணிகளுக்கு விடுத்துள்ள பயண எச்சரிக்கையினை நீக்கிக்கொள்ள முடியும்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகசந்திப்பு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மத்தியகிழக்குநாடுகளில் போர்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் எமது நாட்டின் சுற்றுலாத்துறையிலும் இந்த விடயம் தாக்கம் செலுத்தியுள்ளது.

இதன்விளைவாக உலகநாடுகள் பல இலங்கைக்கு சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சூழ்நிலையில் இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டியது எமது கடமையாகும். இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் சுற்றுலவாபயணிகளுக்கு தாக்குதல் எச்சரிக்கை காணப்படுவதாக புலனாய்வு தகவல் வெளியாகியிருந்தது.

அது தொடர்பாக நாம் கூடிய கவனம் செலுத்தியுள்ளோம்.விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நாம் இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் அதிகமாக செல்லும் கரையோர பகுதிகளுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளோம்.

நாட்டில் அமைதியின்மையை குழப்பத்தினை ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். தாக்குதல் தொடர்பாக வெளிநாட்டு புலனாய்வு தகவலும் கிடைக்கப்பெற்றது. நாம் விரைந்து பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொண்டோம்.

முப்படையினரையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இஸ்ரேலியர்களை இலக்குவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட போவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தேசிய ரீதியாக நாட்டிறகு தாக்குதல் எச்சரிக்கை காணப்படுவதாக புலனாய்வு தகவல் எதுவும் வெளியாகவில்லை. நாம் ராஜதந்திரரீதியாகவும் கலந்துரையாடிவருகின்றோம். வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் தொடர்பாக நாம் மிகுந்த கரிசனையுடன் செயற்படுகின்றோம்.

தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டிற்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.எனவே வெளிநாடுவாழ் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு அச்சமடையதேவையில்லை.எனவே அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் தங்கள் நாட்டு பிரஜைகளுக்கு விடுத்துள்ள பயணஎச்சரிக்கையினை நீக்கிக்கொள்ள முடியும்”இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்