முச்சக்கர வண்டியில் வேட்பாளர்!

by wp_shnn

இலங்கை தேர்தல் விதிமுறைகளின் கீழாக வேட்பாளர் ஒருவர் தான் நேரடியாக துண்டு பிரசுரம் விநியோகித்து தனக்கு வாக்களிக்க கோரி பிரசாரம் செய்ய முடியாது.அதனை மீறியமையாலேயே கைதுகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.

தேர்தல் விதிமுறைகளின் படி  வேட்பாளர் அல்லாதோர் 5 பேருக்கு உட்பட்டு துண்டு பிரசுரம் விநியோகம் செய்து பிரச்சாரம் செய்ய முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் ஏனைய வேட்பாளர்களிற்கு இல்லாத நடைமுறை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கோ மணிவண்ணன் அணியை சேர்ந்த பார்த்தீபனிற்கோ மட்டும்  பாய்வது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே நெல்லியடிப் பகுதியல் துண்டுப்பிரசுர விநியோகம் தேர்தல் விதிமுறைகளுக்கு முறனாக இடம்பெற்றுள்ளதாகாக தெலிவித்து கைதான கஜேந்திரகுமார் காவல்துறை முச்சக்கர வண்டியில் அழைத்து செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்