பொதுத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேட்பாளர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் வரதராஜன் பார்த்தீபன் ஆகியோர் இலங்கை காவல்துறையினரால்; கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியினர்; கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அஇதே போன்று தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபன் பருத்திதுறை பகுதியில் தேர்தல் பிரசாரத்தில. ஈடுபட்டிருந்த போது ஆதரவாளர் ஒருவருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் நெல்லியடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இரவு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் விதிமுறைகளை மீறி துண்டுப்பிரசுரம் விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் இன்று மாலை அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் காவல்துறை திட்டமிட்டே தமது கட்சி வேட்பாளர் மற்றும் ஆதவாளரை கைது செய்துள்ளதாக முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.