பாசிக்குடா பரபரப்பு:முன்னாள் அரசியல் கைதிகள் கைது!

by wp_shnn

இலங்கையிலுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக திட்டமிட்ட சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம்  சுன்னாகத்தைச் சேர்ந்த முன்னாள் அரசியல் கைதி ஒருவர் கைதாகியுள்ளார்.அதேவேளை மாத்தளையை சேர்ந்த மற்றுமொரு முன்னாள் அரசியல் கைதியும் கைதாகியுள்ளார்.கொழும்பில் பாகிஸ்தான தூதர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதான இருவரும் கடந்த ஆண்டின் நவம்பர் மாதம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 19முதல் 23ஆம் திகதிகளுக்கு இடையில் அறுகம்பை பகுதியில் தங்கியிருக்கும் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் உள்ளதாக, இந்திய உளவு அமைப்புகள், இலங்கைக்கு அறிவித்திருந்தன.

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த இருவர் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் ஈராக்கை சேர்ந்தவர் என்றும் புலனாய்வுப் பிரிவு அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாட்டுப் பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்பைப் பேணிய குற்றச்சாட்டில் யாழ்.சுன்னாகத்தினை சேர்ந்த யோகராஜா நிரோசன் மற்றும் மாத்தளையை சேர்ந்த சுப்பிரமணியம் சுவேந்திரராசன் ஆகிய இருவரும் 23ம் திகதி கைதாகியுள்ளனர்.

இதனிடையே சிறையில் இருந்த சமயம் பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டுக் கைதிகளுடன் அவர்களிற்கு நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சிறையில் இருந்து விடுதலையானவர் பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டவர்களுடன் கூட்டிணைந்து மீண்டும் ஒரு நாசகார செயலுக்குத் திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக இந்திய புலனாய்வு அமைப்புக்களது பின்னணியிலேயே பாகிஸ்தான் தூதர் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்