13
மஹாவெவ நகரில் உள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீ பரவியதால் அதே வணிக வளாகத்தில் உள்ள மேலும் பல கடைகளும் எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜவுளிக்கடையில் தீ பரவியதாகவும், பின்னர் படிப்படியாக மற்ற கடைகளுக்கும் பரவியதாகவும், கடை வளாகமும் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் 5 கடைகள் தீயில் எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஹலவத்தை தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை அணைத்ததாகவும், மஹாவெவ, மாதம்பே மற்றும் மாரவில காவல் நிலையங்களின் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாகவும் ஹலவத்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக ஹலவத்தை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்துக்குப் பாதிப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.