3
தமிழ்நாட்டின் நீலக்குறிஞ்சி போல, மகாராஷ்டிராவின் அரிய வகை மலர் – என்ன சிறப்பு?
தமிழ்நாட்டின் நீலக்குறிஞ்சி போல, மகாராஷ்டிராவின் அரிய வகை மலர் – என்ன சிறப்பு?
தமிழ்நாட்டுக்கு நீலக்குறிஞ்சி மலர் போல, மகாராஷ்டிராவுக்கு கார்வி மலர். சயாத்ரி மலைகளில் காணப்படும் இந்த மலர் 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறது.
குறிஞ்சி மலர் குடும்பத்தைச் சேர்ந்த இது, ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை மும்பையின் கோரேகாவ் காடுகளில் ஆயிரக்கணக்கில் பூத்துக் குலுங்கும்.
பாம்பே இயற்கை வரலாற்றுச் சங்கம், இந்த மலர்களைக் காண பொது மக்களுக்குக் காடுகளில் நடை பயணங்களை ஒருங்கிணைக்கிறது.
பி.என்.ஹெச்.எஸ். நிர்வாகிகள், இந்த மலர்களைக் காண மும்பையில் இருந்து மட்டுமல்ல, வேறு ஊர்களில் இருந்தும் ஆர்வமான மக்கள் பலர் வருவதாகக் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட இந்த மலரின் சிறப்புகள் என்ன?