12
முன்னாள் அமைச்சர் டயானா கமகே வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்று, இலங்கையில் செல்லுபடியான விசாக்கள் இன்றி தங்கியிருந்தமை தொடர்பில் அவருக்கு எதிராக இரகசியப் பொலிஸாரால் சுமத்தப்பட்டுள்ள ஏழு வழக்குகளின் சாட்சிய விசாரணையை பெப்ரவரி 06 ஆம் திகதி கொழும்பு நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன் டயானா கமகேவின் சட்டத்தரணி சுகயீனம் காரணமாக மற்றுமொரு திகதியை வழங்குமாறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இவ்வாறு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.