அழைப்புகளிற்கு பதில் அளித்தால் கையடக்க தொலைபேசிகள் வெடிக்கும் என பரவும் தகவல்களை நம்பவேண்டா

by wp_shnn

அழைப்புகளிற்கு பதில் அளித்தால் கையடக்க தொலைபேசிகள் வெடிக்கும் என பரவும் தகவல்களை நம்பவேண்டாம் : இலங்கையின் கணிணி அவசர தயார் நிலை குழு வேண்டுகோள் ! on Thursday, October 24, 2024

கையடக்கத்தொலைபேசிகளிற்கு வரும் அழைப்புகளிற்கு பதிலளித்தால் உங்கள் தொலைபேசிகள் வெடிக்கும் என வெளியாகியுள்ள வீடியோ செய்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என இலங்கையின் கணிணி அவசர தயார் நிலை குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தவிடயம் குறித்து தங்களுடன் பலர் தொடர்புகொண்டுள்ளனர் என கணிணி அவசர தயார் நிலை குழுவின் சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
13 அல்லது 4 என்ற இலக்கங்களிலிருந்து அழைப்பு வந்தால் அவற்றிற்கு பதில் அளிக்கவேண்டாம்இ அதற்கு பதில் அளித்தால் உங்கள் கையடக்க தொலைபேசி உடனடியாக வெடித்துச்சிதறும் இது ஏற்கனவே இடம்பெற்றுள்ளது சிங்கப்பூரிலும் உலகிலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர் இலங்கையை இது பாதிக்குமா என்பது தெரியவில்லை என்ற வீடியோ செய்தி பரவிவருகின்றது.

எனினும் இந்த செய்தியில் தெரிவிக்கப்படுவது போல எந்த கையடக்க தொலைபேசியும் வெடித்து சிதறவில்லை.

தலைதுண்டிக்கப்பட்ட ஒருவர் இரத்த வெள்ளத்தில் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.இது வட்ஸ் அப்பில் பரவும் குரல்பதிவுடன் தொடர்புடையது என பலர் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோவை விசாரணைபிரிவிற்கு அனுப்பியுள்ளோம் அழைப்பின் மூலம் கையடக்க தொலைபேசியை வெடிக்கவைக்கும் தொழில்நுட்பம் எதுவுமில்லை.

13 மற்றும் 4 இல் ஆரம்பிக்கும் தொலைபேசி இலக்கங்கள் குறித்து வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை.தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த இவ்வாறான தகவல்களை பரப்புகின்றனர்.

கையடக்க தொலைபேசிகள் அழைப்பின் போது வெடித்தால் அதற்கு உள்வரும்அழைப்பு காரணமில்லை. இவ்வாறான விடயங்களை மக்கள் நம்பகூடாது.

தொடர்புடைய செய்திகள்