18
மஹவெவ பிரதேசத்தில் உள்ள மூன்று மாடியைக் கொண்ட விற்பனை நிலைய கட்டிடம் ஒன்றில் நேற்று (23) இரவு தீ பரவியுள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடுவாவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சிலாபம் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மின்சார கசிவு காரணமாக தீ ஏற்பட்டுருப்பதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
தீ விபத்தினால் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும், சேத விபரங்கள் தொடர்பில் இதுவரையில் தகவல் வௌியாகவில்லை என்பதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடுவாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.