பாசிக்குடா பக்கம் பரபரப்பு!

by wp_shnn

ஈஸ்டர் தாக்குதலையொத்த தாக்குதல் நடவடிக்கையொன்று தொடர்பில் இலங்கை அச்சங்கொண்டுள்ளது.

இதனிடையே பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் உள்ள சில சுற்றுலாப் பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

அறுகம் வளைகுடா பகுதி மற்றும் இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கில் உள்ள கடற்கரைகள் தொடர்பான குறித்த எச்சரிக்கையானது, “சுற்றுலாப் பகுதிகள் மற்றும் கடற்கரைகளை மையமாகக் கொண்ட பயங்கரவாத அச்சுறுத்தல் பற்றிய அச்சங்காரணமாக அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அறுகம்பை குடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, மறு அறிவித்தல் வரை அறுகம்பை பகுதிக்கு செல்ல வேண்டாம் என தனது பிரஜைகளுக்கு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே அதிகரித்துள்ள இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளது வருகையினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் இலங்கை அரசும் உறுதிப்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்