3
மக்காச்சோள இறக்குமதியை கட்டுப்படுத்த தீர்மானம் ! on Wednesday, October 23, 2024
அடுத்த வருடம் மக்காச்சோள இறக்குமதியை 150,000 மெற்றிக் தொன்களாக குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது வருடாந்தம் சுமார் 300,000 மெற்றிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
மக்காச்சோள இறக்குமதிக்காக செலவிடப்படும் கணிசமான அந்நியச் செலாவணியை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், உள் நாட்டு சோள உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.