16
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பாதுகாப்புக்கான தரமதிப்பீட்டை 7 நட்சத்திரங்களாக மீண்டும் உயர்த்துவதற்கு முன்னணி விமான தரமதிப்பீட்டு நிறுவனமான ‘ஏர்லைன் ரேட்டிங்ஸ்’ நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி சிட்னியிலிருந்து கட்டுநாயக்க நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் விமானிக்கும், அதன் துணை விமானிக்கும் இடையில் மோதலொன்று ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பாதுகாப்புக்கான தரமதிப்பீட்டை ஏழு நட்சத்திரங்களிலிருந்து ஆறு நட்சத்திரங்களாக ஏர்லைன் ரேட்டிங்ஸ் நிறுவனம் குறைத்திருந்தது.
எவ்வாறாயினும், குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதன் பாதுகாப்பு தரமதிப்பீடு மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.