வழிபாட்டுத் தலங்களில் குப்பையாகும் பூக்கள், பூங்காவுக்கு உரமாக மாறுவது எப்படி?

வழிபாட்டுத் தலங்களில் குப்பையாகும் பூக்கள், பூங்காவுக்கு உரமாக மாறுவது எப்படி?

கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பக்தர்களால் வழங்கப்படும் பூக்களும், மாலைகளும் குப்பைகளாக ஆறுகளிலும், குளங்களிலும், நீர்நிலைகளிலும் கொட்டப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

இதனை தடுக்க குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சி ஒரு புதுமையான முயற்சியை கையாண்டு வருகிறது.

மாநகராட்சியே நேரடியாக கோவில்கள் மற்றும் தர்க்காக்களுக்கு வண்டிகளை அனுப்பி குப்பைகளை சேகரிக்கிறது. அவை முறையே தரம் பிரிக்கப்படுகிறது. பிறகு மண்புழு உர ஆலைகளுக்கு அனுப்பி அங்கே அது மண்புழு உரமாக மாற்றப்படுகிறது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 70 டன் உரத்தை தயாரித்துள்ளது சூரத் மாநகராட்சி. இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரத்தை சூரத்தின் தோட்டக்கலை துறை அங்குள்ள பூங்காக்கள், சாலையோர பூங்காக்களில் பயன்படுத்துகிறது.

செய்தியாளர்- ரூபேஷ் சோனாவானே

படத்தொகுப்பு- சாகர் படேல்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு