3
ரணிலைப் பிரதிவாதியாக அறிவிக்க நீதிமன்றம் அனுமதி
2022 ஆம் ஆண்டு சோசலிச வாலிபர் சங்கம் (SYU) ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தை பொலிஸார் தாக்கி கலைத்தமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுக்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
SYU உறுப்பினர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்கள் இன்று (22) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.