13
வன்னி தேர்தல் தொகுதியில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் முன்னாள் போராளி யசோதினி இன்றைய தினம் (21) மன்னாரில் பல பகுதிகளிலும் தனது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்தார்.
அவருக்கு ஆதரவாக முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மன்னார் நகர பஜார் பகுதியில் ஆதரவாளர்களுடன் சந்திப்பிலும் ஈடுபட்டார்.
மேலும் மன்னார் சாந்திபுரம் பேசாலை, நானாட்டான் பகுதியிலும் சந்திப்புகளை மேற்கொண்டார்.
இதில் மன்னார் மாவட்ட சங்க உறுப்பினர்கள், போராளி நலம்புரிச் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.