14
அனுமதியின்றி நடத்திச்செல்லப்பட்ட பண்ணையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பற்ற மின்சாரக் கம்பியில் சிக்குண்டு 3 காட்டு யானைகள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் கஹல்ல – பல்லேகல சரணாலய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த பண்ணையை நடத்தி வந்ததாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் அந்தப் பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.