on Tuesday, October 22, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு, வெளிநாட்டவர்கள் அடங்களாக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
அத்துடன் பொதுத் தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், தபால்மூல வாக்களிப்பு ஒக்டோபர் 31, நவம்பர் முதலாம் மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெற உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களுக்கு நவம்பர் 7 ஆம், 8 ஆம் திகதிகளில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் வன்முறை சம்பவங்கள் அதிகமாக பதிவாகும் என்பதால் கண்காணிப்பு நடவடிக்கைகளும், பொலிஸ் பாதுகாப்பு அனைத்து தொகுதிகளிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இம்முறை பெப்ரல் அமைப்பு, 30 வெளிநாட்டவர்கள் உட்பட 5000 கண்காணிப்பாளர்களை கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை, உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.