7
அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்ய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி
on Monday, October 21, 2024
அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தேர்தல் ஆணைக்குழுவின் விதிமுறைகளை பின்பற்றாமல் செயற்பட்டதால் தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவிற்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் குறித்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் ஆணைக்குழுவிடம் தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்திருந்தது.