6
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையில் வருடாந்த பணவீக்கம் 2024 செப்டம்பர் மாதத்தில் -0.2% ஆகக் குறைந்துள்ளது.
ஓகஸ்ட் மாத்தில் இது 1.1% ஆக பதிவானது.
ஓகஸ்ட் 2024 இல் 2.3% ஆக பதிவான உணவு வகை பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் 0.5% ஆகக் குறைவடைந்துள்ளது.
மேலும், 2024 ஓகஸ்ட் 0.2% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.7% ஆகக் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.