சிறீதரனிற்கு கதிரை நிச்சயமில்லை!

by guasw2

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகள் பிரிந்து இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கண்டுபிடித்துள்ளார்.

இந்நிலையில் தமிழரசுகட்சி சார்பில் யாழ்ப்பாணத்தில் சி.சிறீதரன் வெற்றிபெற்றாலும் அவர் வெற்றியின் பின்னராக பதவியை இழப்பாரெனவும் த.சித்தார்த்தன் ஊகம் வெளியிட்டுள்ளார். 

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வெல்ல வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கின்றது.

தமிழ் கட்சிகளை பொறுத்தவரையிலே பிரிந்து இருக்கின்றன. முக்கியமாக தமிழரசுக் கட்சி இரண்டாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றால் மூன்றாக பிரிந்து நிற்கின்றன. மேலும் தமிழரசுக் கட்சி இருவராக பிரிந்து போட்டியிடுகின்றனர். நாங்கள் ஒருவராக போட்டியிடுகின்றோம்.

கடந்த தேர்தலிலே 40க்கு மேற்பட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் போட்டியிட்டிருந்தன. இந்த நிலைமை இங்கு மட்டுமின்றி ஏனைய இடங்களிலும் அதிகமாகவே இருந்தது. தற்போது இந்த நிலை சற்று அதிகமாக காணப்படுவதோடு அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் எனவும் புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளார் த.சித்தார்த்தன்.

தொடர்புடைய செய்திகள்