கனடாவில் மார்க்கம் பகுதியில் பயணம் செய்த வாகனங்கள் மீது கற்கள் வீசி எறியப்பட்டுள்ளன.
பயணம் செய்து கொண்டிருந்த வாகனங்கள் மீது இவ்வாறு கற்கள் வீசி எறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒன்றாரியோ மாகாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த வாகனங்கள் மீது இவ்வாறு கற்கள் வீசி எறியப்பட்டுள்ளன.
இவ்வாறான ஒன்பது சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதம் இந்த தாக்குதல் சம்பவங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவங்களினால் இரண்டு பேர் படுகாயம் அடைந்ததாகவும் சில வாகனங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அனைத்து தாக்குதல் சம்பவங்களையும் ஒரு சந்தேக நபர் அல்லது ஒரே சந்தேக நபர்கள் மேற்கொண்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.