இந்திய மண்ணில் 36 ஆண்டுக்கு பிறகு டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி – கடைசி நாளில் என்ன நடந்தது?
பெங்களூரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்றுள்ளது.
36 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான வெற்றியை பதிவு செய்துள்ளது
முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் இத்தனை குறைவான ரன்களை எடுத்தது இதுவே முதல்முறை
பதிலுக்கு நியூசிலாந்து அணி 402 ரன்களை குவித்தது.
இரண்டாவது இன்னிங்க்ஸில் சர்ஃபராஸ் கானின் முதல் டெஸ்ட் சதம், பண்டின் 99 ரன்களின் உதவியுடன்ம்இந்திய அணி மொத்தமாக 462 ரன்களை எடுத்தது. எனினும் இந்திய அணியால் முதல் இன்னிங்ஸில் ஏற்பட்ட சரிவிலிருந்து மீள முடியவில்லை.
போட்டியின் ஐந்தாம் நாளில் வெறும் 107 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது நியூசிலாந்து அணி.
நியூசிலாந்து அணிக்கு பும்ராவின் பந்துவீச்சு லேசான தடுமாற்றத்தை தந்த போதிலும் மூன்றாம் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த will young மற்றும் ரச்சின் ரவீந்திரா, நியூசிலாந்து அணியை வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றனர்
இதற்கு முன்னர் 1988ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக வெற்றிப் பெற்றிருந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு