நாட்டின் அரசாங்க வருமானம் 2024 முதல் 8 மாதங்களில் 40.5 வீதத்தால் அதிகரிப்பு !

by smngrx01

on Saturday, October 19, 2024

2024 முதல் 8 மாதங்களில் நாட்டின் அரசாங்க வருமானம் 40.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதை நாட்டின் பொருளாதாரம் சிறந்த திசையில் சுட்டிக்காட்டுவதாக, நிதி அமைச்சு தெரிவித்தது.

கடந்த 2023ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களுடன் ஒப்பிடும் போது இந்த வளர்ச்சி காட்டப்பட்டுள்ளது. மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான (Pre-Election Budgetary Position Report) தேர்தலுக்கு முன்னைய பட்ஜட் நிலை அறிக்கையை வெளியிடும் போது நிதி அமைச்சு இவ்வாறு தெரிவித்தது.

இதற்கமைய 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஓகஸ்ட்வரையான காலப்பகுதியில் வரி வருமானம் மற்றும் வரி அல்லாத வருமானம் உட்பட அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,557.79 பில்லியன் ரூபாவாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் மொத்த வரி வருமானம் 2,348.53 பில்லியன் ரூபாவாக பதிவு

செய்யப்பட்டுள்ளதுடன், அதில் 624.67 பில்லியன் ரூபா வருமான வரியாகவும், 1,421.34 பில்லியன் ரூபா பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரியாகவும் பதிவாகியுள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்பட்ட வரிகளில் பிரதான அங்கமாக இருந்த VAT வரி வருமானம் 842.48 பில்லியன் ரூபாவாக இருந்து 87.2 சதவீதத்தால் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தக் காலப்பகுதியில் கலால்வரி வருமானம் 385.74 பில்லியன் ரூபாவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது 8 மாத காலப்பகுதியில் 42 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. வரி அல்லாத வருமானம் 31.7 சதவீதத்தால் அதிகரித்து 209.26 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாகவும், நிதி அமைச்சு தெரிவித்தது. எவ்வாறாயினும் இந்த வருட இறுதிக்குள் மதிப்பிடப்பட்ட அரசாங்க வருமானம் 4,107 பில்லியன் ரூபாவாகுமெனவும், நிதி அமைச்சு சுட்டிக்காட்டியது.

தொடர்புடைய செய்திகள்