தென்கொரியாவின் ஆளில்லா விமானத்தை கண்டுபிடித்தாக வடகொரியா அறிவிப்பு

by adminDev2

வடகொரியாவுக்குள் தென்கொரியாவால் அனுப்பட்ட ட்ரோனின் எச்சங்களைக் கண்டுபிடித்தாக இன்று சனிக்கிழமை வடகொரியா அறிவித்தது.

வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் தேடுதல் நடவடிக்கையின் போது தென்கொரியாவின் ஆளில்லா விமானத்தின் எச்சங்களைக் கண்டுபிடித்தாக வடகொரியா கூறியது.

இது வான்வழி ஊடுருவல்களின் பின்னால் தென்கொரியா இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக வடகொரியா குற்றம் சாட்டியது.

அத்துடன் சேதமடைந்த ஆளில்லா விமானத்தின் படங்களையும் வடகொரியா வெளியிட்டுள்ளது.

இந்த விமானம் அக்டோபர் 13 திகதி கண்டுபிடிக்கப்பட்டது என்றும் இந்த ஆளில்லா விமானம் தென்கொரியாவின் இராணுவ அணிவகுப்பின் போது தோன்றிய அதே வகை டிரோன்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற வடகொரியா கூறியது.

வட கொரியாவுக்கு எதிரான பிரச்சார துண்டுப் பிரசுரங்களை வீசுவதற்காக தென் கொரியா இந்த மாதம் மூன்று வெவ்வேறு முறை பியோங்யாங்கின் இரவு வானத்தில் ட்ரோன்களை பறக்கவிட்டதாக வட கொரியா குற்றம் சாட்டியது. 

இது போன்ற விமானங்கள் மீண்டும் நடந்தால் பலத்த பதிலடி கொடுக்கப்படும் என வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

ட்ரோன் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் வட கொரியாவின் அறிக்கைக்கு தென் கொரியாவின் இராணுவம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்