சாதாரண தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தர நிபுணத்துவப் பிரிவுக்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் – கல்வி அமைச்சு ! on Saturday, October 19, 2024
2023/2024 சாதாரண தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை உயர்தர நிபுணத்துவப் பிரிவுக்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடங்களில் உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலான மாணவர்களை தொழிற்கல்வி பாடத்துக்கான ஆர்வத்தை அதிகரிப்பதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், கல்வி அமைச்சு 2024/2025 கல்வியாண்டுக்கான உயர்தர தொழில்முறை பாடப்பிரிவுக்காக 12ஆம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பது மற்றும் பாடநெறியின் கல்வி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அனைத்து அதிபர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.