நைஜீரியா: பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவித்த குழந்தைகள் – கல்வியை மீட்டுக் கொடுத்த ஆசிரியர்

காணொளிக் குறிப்பு, கலவரத்தில் தொலைத்த எதிர்காலத்தை கல்வியால் மீட்டெடுக்க காத்திருக்கும் நைஜீரிய மாணவர்கள்

நைஜீரியா: பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவித்த குழந்தைகள் – கல்வியை மீட்டுக் கொடுத்த ஆசிரியர்

நைஜீரியாவின் ப்ளாட்டு மாவட்டத்தில் நெடுங்காலமாக விவசாயிகளுக்கும் ஃபுலானி என்ற மேய்ப்பர் சமூகத்திற்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. அதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலர் புலம் பெயர்ந்துள்ளனர்.

புலம் பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு போதுமான கல்வி வசதிகள் ஏதும் இல்லை.

நைஜீரியாவில் செயல்பட்டு வரும் நாஜா அகபே என்ற அமைப்பு தன்னார்வலர்களை வைத்து மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கின்றனர்.

இதில் இருக்கும் சவால்கள் என்ன? இதுகுறித்து அங்கு பயிலும் மாணவர்கள் கூறுவது என்ன?

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு