6
on Saturday, October 19, 2024
By Shana
No comments
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 35 ஊழியர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை ஆடைத் தொழிற்சாலையில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட பின்னர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு திடீரென சுகயீனமுற்றனர்.
அதனையடுத்து சுகயீனமுற்ற ஊழியர்கள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கட்டுநாயக்க பொலிஸார் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You may like these posts