இஸ்ரேல் பிரதமரின் இல்லத்தின் மீது ட்ரோன் தாக்குதல்!

by adminDev2

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தை நோக்கி ஆளில்லா ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவித்தது.

தாக்குதலின் போது பிரதமரும் அவரது மனையும் அங்கிருக்கவில்லை என்றும் தாக்குதலில் எவருக்கும் காயங்கள் ஏற்பட்வில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை அதிகாலை உள்ளூர் நேரப்படி 8.19 மணியளவில் மூன்று ட்ரோன்கள் லெபனானில் இருந்து இஸ்ரேலுக்குள் ஏவப்பட்டன.

அதில் ஒன்று இஸ்ரேலின் கடலோர நகரமான சிசோியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமருக்குச் சாெந்தமான தனியார் இல்லத்தை நோக்கி அனுப்பப்பட்டது. அந்த ட்ரோன் அந்நகரில் உள்ள  கட்டிடத்தில் மோதி வெடித்ததாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

தாக்குதலுக்கு இலக்கான கட்டிடம் குறித்தோ அல்லது தேச விபரங்கள் குறித்தோ எதுவித தகவல்களையும் இஸ்ரேல் இராணுவம் தெளிவுபடுத்தவில்லை.

ஏனைய இரண்டு ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

நெதன்யாகு சிசேரியா மற்றும் ஜெருசலேமில் உள்ள இரண்டு தனியார் வீடுகளைப் பயன்படுத்துகிறார். மேலும் ஜெருசலேமில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான பெய்ட் அகியோனிலும் தங்கும் நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டது.

சனிக்கிழமை லெபனானில் இருந்து இதுவரை சுமார் 55 ராக்கெட்டுகள் இஸ்ரேலுக்குள் ஏவப்பட்டதாக ஐடிஎஃப் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்