6
ஹமாஸ் அமைப்பினரால் பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளை விடுவித்தால் போர் நாளை முடிவுக்கு வரும் என இஸ்ரேலியப் பிரதமர் பென்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் மரணம் குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இணையத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் ஆங்கிலத்தில் பேசியிருந்தபோது இக்கருத்தை வெளியிட்டார்.
இது காசாவில் போர் முடிவடையவில்லை என்றாலும், இது முடிவின் ஆரம்பம் என்று நெதன்யாகு கூறினார்.
காசா மக்களுக்கு நான் ஒரு எளிய செய்தியைக் கூறுகிறேன். இந்தப் போர் நாளை முடிவடையும். ஹமாஸ் தனது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எங்களின் பணயக்கைதிகளை திருப்பி அனுப்பினால் அது முடிவுக்கு வரும் என்று அவர் மேலும் கூறினார்.