சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இம்முறை தாம் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக முற்போக்கு தமிழர் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் அறிவித்துள்ளார்.
இதனிடையே வியாழேந்திரன் எமக்கு ஆதரவு தருவதாக கூறியுள்ளார். ஆனால் அவருக்கும் எங்களுக்கும் இடையில் எந்த உடன்படிக்கையும் இல்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளாhர்.
எனினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அத்தகைய தீர்மானத்தினை எடுத்துள்ளதாக வியாழேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முறையும் நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் களம் காணயிருந்தோம். துரதிர்ஸ்டவசமாக எங்களது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
இலங்கையில் 70க்கும் அதிகமான கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக நாங்கள் போட்டியிட இருந்த ஜனநாயக தேசிய கூட்டணியினுடைய வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இனவிகிதாசாரப்படி நான்கு தமிழ் பிரதிநிதிகள் மட்டக்கள்பபில் தெரிவுசெய்யப்படவேண்டும்.
அந்த அடிப்படையில் ஒரு தமிழ் கட்சிக்கு ஆதரவினை வழங்கலாம் என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளோம். கழக உறுப்பினர்களின் அனைவரது கருத்தினையும் எடுத்து பொதுத்தேர்தலில் முற்போக்கு தமிழர் கழகமானது முழுமையாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு வழங்குவதற்கு தீர்மானித்திருக்கின்றோமென வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.