கோவில் கோவிலாக ஏறி கதிரைப்பிச்சை!

by 9vbzz1

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மதத்தலைவர்களது ஆசீர்வாதத்துடன் தமது பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஈழத் தமிழ் மக்களுக்காகச் செயற்படுகின்ற தமிழ்த் தேசியக் கட்சிகளிடத்தே ஒற்றுமை இல்லை என்று ஆதங்கம் வெளியிட்டுள்ள மதத் தலைவர்கள், தெற்கு போன்று வடக்கு, கிழக்கிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு புதிய தலைமுறை தோற்றம் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை யாழில் மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மதத் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மதத் தலைவர்கள் அவ்வாறு குறிப்பிட்டதாக முன்னாள் யாழ்.மாநகரமுதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஆயருடனான சந்திப்பின்போது எங்களுடைய அரசியலிலே முற்று முழுதான மாற்றம் வர வேண்டும் என்று ஆயர் குறிப்பிட்டார். அதேபோன்று தமிழ் மக்களும் முற்றுமுழுதான மாற்றத்தைக் கொண்டு வருவார்கள் என்று நாங்களும் எதிர்பார்க்கின்றோம்.

தமிழர் தரப்பிலுள்ள கட்சிகள் மத்தியில் ஒற்றுமை வேண்டும் என்றும், நல்லதொரு மாற்றம் வர வேண்டும் என்றும், புதிய தலைமுறை தோற்றம் பெற வேண்டும் என்றும் சமயத் தலைவர்களும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.” – என்றும் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்