முல்தான் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தின் வெற்றிக்கு மேலும் 261 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.போட்டியின் 3ஆம் நாளான வியாழனன்று 297 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து போட்டியின் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 36 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.ஒலி போப் 21 ஓட்டங்களுடனும் ஜோ ரூட் 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.
போட்டியில் இன்னும் 2 நாட்கள் மீதம் இருப்பதால் இந்தப் போட்டியில் என்த அணியும் வெற்றி பெறலாம் என்ற நிலை காணப்படுகிறது.
எண்ணிக்கை சுருக்கம்
பாகிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 366 (கம்ரன் குலாம் 118, சாய்ம் அயூப் 77, மொஹம்மத் ரிஸ்வான் 41, நோமான் அலி சல்மான் அகா 31, ஜெக் லீச் 114 – 4 விக்., ப்றைடன் கார்ஸ் 50 – 3 விக்.)
இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 291 (பென் டக்கட் 114, ஜோ ரூட் 34, சாஜித் கான் 111 – 7 விக்., நோமான் அலி 101 – 3 விக்.)
பாகிஸ்தான் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 221 (சல்மான் அகா 63, சவூத் ஷக்கீல் 31, கம்ரன் குலாம் 26, ஷொயெப் பஷிர் 66 – 4 விக்., ஜெக் லீச் 67 – 3 விக்.)
இங்கிலாந்து வெற்றி இலக்கு 297 ஓட்டங்கள் – 2ஆவது இன்: 36 – 2 விக்.