ரில்வின் சில்வா கருத்து எத்தரப்பினது?

by 9vbzz1

அரச முக்கியஸ்தர் ரில்வின் சில்வாவின் கருத்து அரசாங்கத்தின் கருத்தா ஜே.வி.பியின் கருத்தா அல்லது தேசிய மக்கள் சக்தியின் கருத்தா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா), கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தமும் அதிகாரப்பகிர்வும் வடக்கு மக்களுக்கு அவசியமில்லை. அரசியல் இருப்பைத் தக்கவைக்க தமிழ் அரசியல்வாதிகள் அதனைப் பயன்படுத்தி வருகின்றார்கள் என ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். தமிழர்களது தாயகம் வட கிழக்கு என்பதை மறுத்து வடக்கு என்பதாகவே ஒப்புவித்துள்ளார். ரில்வின் சில்வா அன்று போல இன்று எதிர்க்கட்சியில் இருந்து எல்லாவற்றையும் எதிர்க்கவேண்டும் என்பதற்காக கூறும் நபரல்ல. தேசிய மக்கள் சக்தியின் பிரதான கட்சியான ஜே.வி.பி.யின் செயலாளர். தற்போது அக் கூட்டணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கா  ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக உள்ளார்.

அனுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கோசம் முறைமை மாற்றம் தேவை என்பதே. முறைமை மாற்றத்துக்கு நாம் ஒன்றும் எதிரானவர்கள் அல்ல. 

வட கிழக்கு வாழ் தமிழ்த் தேசியம் நாடும் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதற்கும் தெற்கில் ரோஹன விஜயவீர தலைமையில் ஆயுதம் ஏந்தியமைக்கும் இடையிலான வித்தியாசத்தை ரில்வின் சில்வா புரிந்து கொள்ளவில்லை.

நாட்டில் கௌரவமாக, சுதந்திரமாக, சமத்துவமாக, வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டதற்காகவா என்பதை ஏனைய சிங்களத் தலைவர்களைப்போலவே இடது சாரியான ரில்வின் சில்வாவும் ஏன் இன்னமும் புரிந்து கொள்ளவில்லையா எனவும் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்