தொழிற்சங்க பிரதிநிதிகள் நாடாளுமன்றுக்குள் உள்வாங்கப்படுவதில் எந்தவித தவறும் இல்லை ! on Friday, October 18, 2024
”தொழிற்சங்க பிரதிநிதிகள் நாடாளுமன்றுக்குள் உள்வாங்கப்படுவதில் எந்தவித தவறும் இல்லை” என ஐக்கிய ஜனநாயக்குரல் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவிகுமுதேஷ் தெரிவித்துள்ளார்.
எமது சகோர தொலைக்காட்சியான சுவர்ணவாஹின தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹரிமக அரசியல்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டார்.
இது குறித்து ரவிகுமுதேஷ் மேலும் தெரிவித்துள்ளதாவது” கொரோனாத் தொற்று காலப்பகுதியில் கோட்டாபயராஜபக்ஷ முன்னெடுத்த வேலைத்திட்டங்களையும் சரியென ஏற்றுக்கொண்ட சமூகத்திற்கு மத்தியில் நாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதனை சவாலுக்கு உட்படுத்தினோம். கோட்டாபய ஆட்சிக்குவந்த நாள் முதல் அவர் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை நாம் சவாலுக்கு உட்படுத்தினோம். ஊழல் மோசடிகளை நாம் வெளிச்சத்துக்குகொண்டுவந்தோம்.
ஊழல்மோசடிகளை சுட்டிக்காட்ட எவரும் முன்வராத சந்தர்ப்பத்தில் நாம் பகிரங்கமாகவே அவற்றை தெரிவித்திருந்தோம். சுகாதார பிரச்சினை விவகாரத்தில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஒருவர் சிறைக்கு செல்லும்வரை நாம் போராடினோம்.
நாம் தொழிற்சங்கவாதிகளாக எமது கடமைகளை சரிவர செய்துள்ளோம் எமக்கு நம்பிக்கை உள்ளது நாட்டில் நல்லமாற்றங்களை ஏற்படுத்துவதற்கு குரல் கொடுத்த நாம் அடுத்தகட்டத்திற்கு சென்று மாற்றத்தினை கொண்டுவர முடியும் என நம்புகின்றோம்” இவ்வாறு ஐக்கிய ஜனநாயக்குரல் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.