இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் பலி!

by smngrx01

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டதாகவும் அதில் அந்த அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வாரும் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பின்புலத்தில் இருந்து செயல்பட்ட முக்கிய மூளையாக இருந்த யாஹ்யா சின்வார் மரணம் அடைந்து விட்டார் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று உறுதி செய்திருக்கிறார். இதனை டைம்ஸ் ஆப் இஸ்ரேல் பத்திரிகை தெரிவித்து உள்ளது.

ஹமாஸ் தலைவரின் மரணம் பற்றிய செய்தியை, பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேல் மக்களின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கும்படியும், நெதன்யாகு அவருடைய உதவியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.

ஈரானில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில் ஹமாசின் புதிய தலைவராக  யாஹ்யா சின்வார் ஹமாஸ் அமைப்பு அறிவித்தது. 

யாஹ்யா சின்வார் ஹமாஸ் ஆயுதக்குழுவின் காசா முனை பிரிவிற்கு மட்டும் தலைவராக இருந்து வந்த நிலையில் ஒட்டுமொத்த ஹமாஸ் அமைப்பிற்கும் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பணயக்கைதிகள் அனைவரும் வீடு திரும்பும் வரை காசாவில் சண்டை தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

யஹ்யா சின்வாரின் மரணம் மத்திய கிழக்கில் அமைதிக்கான வாய்ப்பை வழங்கியதாக இஸ்ரேல் பிரதமர்  பெஞ்சமின் நெதன்யாகு கூறினார், ஆனால் காஸாவில் போர் முடிவடையவில்லை என்று எச்சரித்தார்.

சின்வார் மரணம் காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பாதையை திறக்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி பிடன் கூறுகிறார்.

சின்வாரின் மரணம் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும், உலகத்துக்கும் ஒரு நல்ல நாள் என்று ஜனாதிபதி ஜோ பிடன் எழுத்துப்பூர்வமாகக் கூறினார்  

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் கொன்றது காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பை வழங்கியதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்